tamilnadu

img

மோடி- எடப்பாடி அரசுகளை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டார்கள் ஆர்.நல்லகண்ணு, து.ராஜா பேட்டி

திருவாரூர், ஏப்.14-தேர்தலில் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசாங்கத்தையும், பாஜகவிற்கு சேவகம் செய்யும் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசையும் வீழ்த்துவதற்கும், வீட்டிற்குஅனுப்புவதற்கும் தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேசிய செயலாளர் து.ராஜா ஆகியோர் தெரிவித்தனர். நாகை மற்றும் திருவாரூர் தொகுதிகளில் தேர்தல் பிரச்சார பணிகளில்ஈடுபட்ட அவர்களை செய்தியாளர் களைச் சந்தித்தனர். திமுக தலைமையிலான மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.செல்வராசுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பூண்டி கே.கலைவாணனுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்ய திருவாரூருக்கு வருகை தந்தஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியசெயலாளர், எம்.பி து.ராஜா, சுதந்திர போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் திருவாரூர் சிங்காரவேலர் நினைவரங்கத்தில் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது:அகில இந்திய அளவில் மக்களுடைய எண்ணமும், அனுபவமும் மோடிஅரசாங்கத்திற்கு எதிராகவே உள்ளது.பாஜக அரசு மீது மக்கள் பெரும்கோபத்தில் உள்ளார்கள், தமிழகத்தில்உள்ள அ.தி.மு.க மற்றும் பா.ம.க போன்ற கட்சிகள் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம்.


மக்கள் நலன்களுக்குக் குரல் கொடுக்காத மதவெறிபிடித்த கட்சிகளோடு கூட்டணி வைத் துள்ளதை மக்கள் ஏற்கவில்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழக மக்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. பாஜகவின் தேர்தல்அறிக்கையைத் தேர்தல் அறிக்கைஎன்று சொல்வதை விட மக்கள் மீதுஏற்படுத்தும் தாக்குதல்களின் பிரகடனம் என்றே கூறலாம். இந்திய ஜனநாயகத்திற்கு எதிராகவும், அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ம் இணைந்து தாக்குதல்களை ஊக்கப்படுத்தும் பிரகடனமாகத் தான் பாஜகவின் தேர்தல் அறிக்கை உள்ளது.பாஜக அரசு இந்த ஐந்து வருடமாக என்ன செய்தார்கள் என்று அறிக் கையில் சொல்லவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று கூறி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். விவசாயிகளும், விவசாயத்தொழிலாளர்களும் நிரம்ப வாழும்இந்த திருவாரூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். அதைச் செய்யாமல் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்க முனைகிறார்கள். அதை எடப்பாடி அரசு தடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.மோடி ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். பாஜகவின் பாசிசஆட்சி அகற்றப்பட வேண்டும் எனமக்கள் எண்ணுகிறார்கள்.


தமிழகத்தில்தற்போது செயல்பட்டு வரும் அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. விரைவில் அதுவும் முடிவுக்கு வரும். நீடித்து நிற்க இயலாது” என்றார்கள்.நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்புத் திட்டம் கொண்டு வரப்படும் என்றுகூறியுள்ளது வரவேற்கிறேன் எனக் கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த து.ராஜா, ரஜினிகாந்த் எத்தனை தேர்தல் அறிக்கை படித்தார் எனக்குத் தெரியவில்லை. ஆனால் பல கட்சிகள் நதிநீர் இணைப்புபற்றி பேசியுள்ளது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை மட்டும் அவர் கண்ணில் எப்படி பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. ரஜினிகாந்த் எந்த நிலையில் பேசுகிறார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர் மோடி எல்லோருக்குமான அரசு, எல்லோருக்குமான திட்டங்கள் எனப் பேசினார். அதே நேரத்தில் இந்த அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தினாரா என ரஜினிகாந்த் பேச வேண்டும். தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் கள் அதே போன்று பழங்குடி மக்கள் எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ரஜினிகாந்த் கருத்துக் கூற தயாராக உள்ளாரா. மோடியை யாரும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர் எனக் கூற இயலாது. ஏன் என்றால் ரபேல் போர் விமானங்கள் பிரச்னைகள் வந்ததற்குப் பின்னர் மோடி தனிப்பட்ட முறையில் ஊழலுக்கு எப்படி உறுதுணையாக இருந்தார் என்பதும் ஊழலில் ஈடுபட்டுள் ளார் என்பதும் அம்பலம் ஆகியுள்ளது” என்றார். சந்திப்பின் போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோ.பழனிச்சாமி, பி.சேதுராமன், மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம் ஆகியோர் உடனிருந்தனர்.

;