திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

பிளஸ்-2 பொதுத்தேர்வில் நியூ பாரத் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

திருவாரூர், ஏப்.23- திருவாரூர் நகரில் செயல்பட்டு வரும் நியூ பாரத்மெட்ரிக்குலேசன் பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்இந்த ஆண்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனைபடைத்துள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 89 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் முதல் வகுப்பில்61 மாணாக்கர்களும், இரண்டாம் வகுப்பில் 28 மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கணினி அறிவியல் பிரிவில் ஜி.ஆகாஷ்(512), ஏ.ஆர்.செந்தன்(471), எஸ்.பைசல்(414) மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.உயிர் கணித பிரிவில் வி.ஜி.கிரித்திக் ஸ்ரீ(532), எஸ்.நந்தகுமாரன் (523), எம்.மகாலெட்சுமி(497) மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். வணிகவியல்(சி.எஸ்) பிரிவில் ஆர்.சிவராஜ்(518), எஸ்.அமுதா(447), வி.விஜயரவிந்திர ராஜ்(370), வணிகவியல்(பி.எம்) பிரிவில் எம்.பூஜாலெட்சுமி(565), ஏ.மதனா(548), எம்.அக்ஷயா(520) மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணாக்கர்களையும், தேர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர், பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

;