tamilnadu

img

பால் உற்பத்தியாளர் சங்கப் பேரவை

 குடவாசல், செப்.22- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு ஒன்றிய தலைவர் பி.இரத்தினசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .மாவட்ட தலைவர் எஸ்.துரைசாமி சிறப்புரையாற்றினார்.  புதிய தலைவராக பி.இரத்தினசாமி, செயலாளராக சரவண. சதீஸ்குமார், பொருளாளராக ஆர்.சுதாகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பால் உற்ப்பத்தியாளர்களின் கோரிக்கைகள் முன்மொழியப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஆர்.சுந்தரமூர்த்தி பி.ஸ்டாலின், வி.கலியபெருமாள், உதுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.