திருத்துறைப்பூண்டி, ஜன.11- திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருக்கான மறைமுக தேர்தல் சனிக்கிழமை நடை பெற்றது. இதில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின், திருத்துறை ப்பூண்டி ஒன்றியச் செயலாளரா கவும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக வும் பணியாற்றி வரும் அ.பாஸ்கர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் இதற்கு முன்பு நெடும்பலம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பி டத்தக்கது. மாலையில் நடைபெற்ற துணை பெருந்தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இவர் திமுகவின் மாவட்ட துணைச் செயலாளராகவும் வழக்க றிஞராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.