திருவள்ளூர், செப். 28- இந்தியாவிற்கு தேவையான எரிவாயு வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு சென்னை எண்ணூர் கொச்சின் குஜராத் மங்களூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாரத் இந்தியன் மற்றும் இந்துஸ்தான் எரிவாயு ஆலைகளில் நிரப்பப்பட்டு அங்கிருந்து நாடு முழுவதும் உள்ள எரிவாயு நிரப்பும் ஆலைகளுக்கு எச்.பி ராட்சத டேங்கர் லாரி மூலம் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வரு கிறது. இந்தநிலையில் நாளொன்றுக்கு 7 லட்சம் டன் எரி வாயு உற்பத்தி செய்துவந்த சவுதி அரேபியாவில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவனம் மீது அண்மை யில் ஆளில்லா விமானம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அந்த நிறுவனம் சேதமடைந்ததால் அங்கு எரிவாயு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது இதனால் இறக்குமதி தாமதம் அடைந்து வருவ தால் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் போதிய எரிவாயு கையிருப்பு இல்லாததால் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட தமிழகத்திலுள்ள அனைத்து பாரத் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை களிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது இதனால் முகவர்களுக்கு சமையல் எரிவாயு உருளை விநி யோகம் நிறுத்தப்பட்டுள்ளது இதன்காரணமாக பாரத் சமையல் எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் எண்ணூரில் உள்ள இந்தியன் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில் எரிவாயு கையிருப்பு குறைவாக உள்ளதால் அந்த நிறுவனம் உற்பத்தியை படிப்படியாக குறைத்து வருகிறது. ஏற்கனவே கடந்த 20 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தவர்களுக்கு இதுவரை சமையல் எரிவாயு உருளை கிடைக்காத நிலையில் தற்போது நாடு முழுவதும் அதன் உற்பத்தி குறைந்து வருவதால் இந்தியாவிலுள்ள சுமார் 27 கோடியே 3 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் மூன்று கோடி குடும்பங்கள் எரிவாயு உருளைகளை நம்பி உள்ளன. ஏற்கனவே நியாயவிலை கடைகளில் வழங்கப் பட்டு வந்த மண்bண்ணெயின் அளவு குறைக்கப் பட்ட தாலும் அடுப்பெரிக்கும் விறகு கட்டை விலை உயர்வு ஆகியவற்றால் சமையல் செய்வது கடினம் என்பதாலும் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டா லும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.