திருவள்ளூர், ஜன.25- எண்ணூர் அனல் மின் நிலையம் புதிதாக அமைக்க அதற்கான கட்டுமான பணி கள் நடைபெற்று வருகின் றன. அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், வட சென்னை அனல் மின் நிலை யம், காமராஜர் துறைமுகம், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் எண்ணூரி லிருந்து வட சென்னை அனல் மின் நிலையம் செல்லும் சாலையைத் தான் பயன் படுத்தி வருகின்றனர். எண்ணூரில் சாலையில் தொடங்கி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கருவேல மரங்கள் இருபுறமும் வளர்ந்து சாலையில் நீண்டு உள்ளது. இதனால் வாகன ஒட்டிகளுக்கு சாலை முழுமையாக தெரியாமல் அவதிப்பட்டனர். மேலும் கருவேல மர முட்களின் முகம், கைகளில் காயங் கள் ஏற்படுகிறது என தீக்க திரில் அண்மையில் செய்தி வெளிவந்தது. இதனை தொடர்ந்து சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்திருந்த கருவேலமரங்களை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.