திருவள்ளூர்:
இந்திய திரை வானில் அரை நூற்றாண்டு காலம் கோலோச்சி கொடிகட்டிப் பறந்த ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம்உடல் தமிழக அரசின் மரியாதையுடன் 22 குண்டுகள் முழங்க தாமரைப்பாக்கம் பண்ணை வீட் டில் அடக்கம் செய்யப்பட்டது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25 அன்று காலமானார். இதனையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் வைத்திருந்த அவரது உடலுக்கு அமைச்சர் டி. ஜெயக்குமார், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் தீனா, இயக்குனர் சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் கலைப்புலிதாணு, நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் வெள்ளியன்று மாலை 7 மணிக்கு அங்கிருந்து வாகனம் மூலம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு புறப்பட் டது. அவரது உடலுக்கு வழிநெடுகிலும் ரசிகர்களும் பொதுமக்களும் திரண்டு இதயஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.
அஞ்சலி...
உறவினர்கள் மட்டுமே பண்ணை வீட்டில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், சனிக்கிழமையன்று (செப்.26) காலை 7 மணி முதல் திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.எஸ்.பி.பியின் மறைவுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில் குமார் யாதவ்,திருப்பதி எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டியும் ஆகியோர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.தமிழக அரசு சார்பில் அமைச் சர் பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார், தாமரைப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொருவராக வந்து தனிமனித இடைவெளியுடன் மனம் உருக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் பாரதிராஜா, பாடகர் மனோ, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் உள்ளிட்ட ஏராளமான திரைப்பட பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.தாமரைப்பாக்கத்தில் வைக் கப்பட்டிருந்த எஸ்.பி.பியின்உடலுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டிய ராஜன் இறுதி அஞ்சலி செலுத்தினார். தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு வருகை தந்த நடிகர்கள் அர்ஜூன், விஜய் இறுதி அஞ்சலி செலுத்தினார்.திரையிசை வானில் அரை நூற்றாண்டுகாலம் கோலோச்சி ஏராளமான சாதனைகளுக்கு சொந்தமான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.அதன்படி, நண்பகல் 12.30 மணிக்கு ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி.க்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். பின்னர் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது விருப்பப்படி பண்ணை வீட்டில் உடல் அடக்கம் செய்யப் பட்டுள்ளது.