திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணித் தள ஒருங்கிணைப்பாளராக ஓராண்டுக்கு முன்பாக பணி நியமனம் செய்யபட்டவர்களுக்கு பணி வழங்கக்கோரி குறைத்தீர்க்கும் நாளான திங்களன்று (நவ-4) மாவட்ட வருவாய்த்துறை அலுவலரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட டிஆர்ஒ பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 49 ஊராட்சிகளில் உள்ள தொழிலாளர்களின் பணி நியமனம் குறித்து செவ்வாயன்று விசாரணைக்கு அழைத்துள்ளார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம், சிபிஎம் வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.