திருவேற்காட்டில் 37 ஆண்டுகளாக உதவும் கரங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு முதியவர்கள், ஆதரவற்றோர் என 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்குள்ளவர்களுடன் லோட்டே இந்தியா தலைமை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். மேலும் அங்குள்ள குழந்தைகளுடன் விளையாட்டு, கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர்.இதில் லோட்டே இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மிலன் வாகி,உதவும் கரங்கள் நிறுவனர் வித்யாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.