திருவண்ணாமலை, ஜுன் 18- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கரைப்பூண்டியில் அமைந்துள்ள தரணி சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஐந்து மாத ஊதியத்தை வழங்கக் கோரி சிஐடியு சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. தரணி சர்க்ககரை ஆலை நிர்வாகம் தொழி லாளர்களுக்கு 5 மாத காலமாக ஊதியம் தராததை கண்டித்தும், கரும்பு விவவசாயி களுக்கு நிலுவை தொகையை தராமல் காலம் கடத்துவதைக் கண்டித்தும் போளூர் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு கடந்த ஜுன் 4ஆம் தேதி ஆர்பாட்டடம் நடைபெற்றது. அப்போது ஜுன் 10ஆம் தேதிக்குள் ஊழியர்களுக்குகளுக்கு ஊதியத்தை வழங்குவதாகவும், முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி மற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகவும் நிர்வாகத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனால் அந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வில்லை. இதனால் ஊழியர்கள் தரணி சர்க்கரை ஆலை முன்பு வியாழனன்று (ஜூன் 17) கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தரணி சர்க்ககரை ஆலை எம்ப்ளா யிஸ் யூனியன் செயலாளர் எஸ்.தண்டபாணி, துணைத் தலைவர் பாலமுருகன், பெரிய சாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செல்வன், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி அ.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.