வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

மதுக்கடையை அகற்றக் கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை, ஏப். 24-திருவண்ணாமலையை அடுத்த மேல் புத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்த மார்க்கண்டேயன், உத்தர குமார் ஆகிய இருவரும் நண் பர்களுடன், மேலத்திக்கான் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களுக்கும், அங்கு வந்த, பெருமாள் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், கன்னக்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்த ராஜா ஆகியோருக்கும், உத்திரகுமார் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள் ளது. இதில் படுகாயமடைந்த உத்திரகுமார், மார்கண்டேயன் இருவரும், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக மார்க் கண்டேயன் வேலுர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.இந்நிலையில், மார் கண்டேயனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலத் திக்கான் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரி, மேல் புத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்த மார்க்கண்டேயன் உறவினர்கள், மற்றும் கிராம மக்கள் திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;