திருவண்ணாமலை மாவட்டத்தில் சாரணர் சாரணியர் இயக்கத்திற்கு, 2018 ஆம் ஆண்டிற்கான, ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி, தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.சு. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.