tamilnadu

img

ஒரு வாக்கில் தோல்வி: மீண்டும் எண்ண கோரிக்கை

திருவண்ணாமலை, ஜன. 4- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக் கம் ஒன்றியம், சீட்டம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் வாக்கு எண்ணிகையின்போது முறைகேடு நடந்ததால் ஒரு வாக்கு வித்தி யாசத்தில் தோல்வியடைந்த காவுக்காரன் மறுபடியும் எண்ண வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் சீட்டம்பட்டு ஊராட்சி மன்றத் தலை வர் பதவிக்கு போட்டியிட்டேன். எனக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கெண்ணும் அலுவலர், ஆட்டோ சின்னத்தில் விழுந்த 2 வாக்குச்சீட்டில், மை பட்டிருந்த போதிலும், தேர்தல் ஆணைய  விதிப்படி செல்லும் என்று தெரிவித்தார். எதிர்த்  தரப்பினர் கூச்சல் குழப்பம் போட்டு வாக்கு  எண்ணும் அதிகாரிகளை மிரட்டி அந்த  வாக்குச் சீட்டுகளை செல்லாத வாக்குகளாக அறிவிக்கக் கோரினர். இதனால் வாக்கெண்ணும் அலுவலர் செல்லாது எனக் கூறி செல்லாத வாக்குப் பெட்டியில் போட்டு விட்டார் . இதனால், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மறு வாக்கு  எண்ணிக்கை நடத்த கோரிக்கை வைத்தேன்.  ஆனால் அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கா மல், எதிர் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறி விக்கப்பட்டது. எனவே மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவரும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.