tamilnadu

img

வெடி பொருட்களை கொண்ட டிராக்டர் ஓட்டுனர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொடியாலம் கிராமத்தில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி பாஸ்கர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர். 


அப்போது, அவ்வழியே வந்த டிராக்டரை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில், சேகர் என்பவர் அனுமதியின்றி 125 டெட்டனேட்டர்கள், 109 ஜெல்லட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கொண்டு வந்தது தெரிந்தது. இதை அடுத்து, போலீஸார் சேகரை கைது செய்தனர்.


இதை அடுத்து, சேகரின் வீட்டை சோதனையிட்ட போலீஸார் குளியலறையில் இருந்த வெடிபொருட்கள் உட்பட மொத்தம் 326 ஜெலட்டின் குச்சிகள், 522 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சேகர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.