வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் - கைது

திருப்பூர், ஜூலை 12- திருப்பூரில் வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டி பாலி யல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரி டம் இருந்து வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி போலீ சார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியை சேர்ந்த வர் மாது (41). தனியார் பனியன் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வரும் இவர், அங்கு   வேலை செய்து வரும் 24 வயது பெண் ஒருவரை ஆபாசமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்து மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண்ணிற்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள் ளனர். இதையறிந்த மாது அந்த மாப்பிள்ளைக்கு இந்த பெண் ணின் வீடியோ மற்றும் போட்டோவை அனுப்பி வைத் துள்ளார். அந்த பெண்ணின்  போட்டோ மற்றும் வீடி யோவை சமுக வலைதளத்திலும் பதிவேற்றம் செய்துள் ளார்.  இதனால் மனமுடைந்த, பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள் ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மாதுவை கைது செய்து, போட்டோ மற்றும் வீடியோவை  பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;