அவிநாசி, ஜன. 12- அவிநாசி அருகே மின்தடையால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். அவிநாசி அருகே பொங்கலூர் ஊராட்சியில் ஆதி திராவிடர் காலனி உள்ளது. இப்பகுதியில் உள்ள 40 வீடுகளில் சுமார் 250பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று பராமரிப்பு பணிகள் கார ணமாக மின்சாரம் தடை செய்யப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்து மாலையில் மின் விநியோம் செய்யப்படும். ஆனால் இரவு முதல் மின்சாரம் கிடைக்கவில்லை. பொது மக்கள் அப்பகுதி மின்சார வாரிய ஊழியரை (லைன் மேன்) கைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட போது அவரது கைப்பேசி அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கோவை- சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த சேவூர் காவல் ஆய்வாளர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மின்வாரியத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய மேற்பார்வையாளர் மின் விநியோகத்தை சீர் செய்தார்.