அவிநாசி நவ.9- திருப்பூர் அருகே பரமசிவம்பா ளையத்தில் உள்ள குட்டை 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வா ரப்படாமல் இருப்பதால் அப்பகு தியைச் சுற்றிலுள்ள விவசாய நிலங்கள் விவசாயத்திற்கு பய னன்று தரிசு நிலமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பொங்கு பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளையம் கருப்பராயன் கோவில் அருகாமையில் பொதுப்ப ணித் துறைக்குச் சொந்தமான குட்டை அமைந்துள்ளது. இக் குட்டை 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததால் மரங்கள், செடிகள் சூழ்ந்து அடர்ந்த வனப்பகுதி போல் காட்சியளித்து வருகிறது. இதனால், போதுமான மழை நீரை தேக்கி வைக்க முடியா மலும், அப்பகுதி விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சி யர், வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைத்து அரசு அதிகாரிகள் மட் டத்திலும் பலமுறை முறையிட்டும், மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.
எனவே, விவசாயிகள் பயன்பாட்டிற்காகவும், மழைநீரை சேமிக்கவும் உடனடியாக குட் டையை தூர்வார வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி யுமான எஸ்.அப்புசாமி கூறுகை யில், இந்த குட்டையை சுற்றி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது. இந்நிலையில், பல வருடமாக குட்டை தூர்வாராத தால் விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரம் இல்லாமல் விவசாயி கள் கவலை அடைந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றின் நீர் மட்டமும் ஆயிரம் அடிக்குக் கீழே சென்றுவிட்டது. இதனால், எதிர்கா லத்தில் ஊராட்சிக்கு நீர் ஆதாரம் என்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே, உடனடியாக குட்டை யினை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சாலை, தெரு விளக்கு அமைத்திடுக
இதேபோல், இக்குட்டையை தாண்டி அமைந்துள்ள சாலையா னது பரமசிவம்பாளையம், பழங் கரை, பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தும் பிர தான சாலையாக உள்ளது. இந்தச் சாலையை வாகன ஓட்டிகள், பாதசா ரிகள், பொதுமக்கள் என தினசரி 100க்கும் மேற்பட்டோர் பயன்ப டுத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சாலை பல வருடமாக குண்டும் குழியுமாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, இச்சாலையை சீரமைத்து, விபத் துகளை தவிர்த்திட தெருவிளக்கு களை அமைத்திட வேண்டும். குட்டை மடை (செக் டேம்) பகுதிக்கு தரைமட்ட பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.