tamilnadu

காலமானார்

தாராபுரம், பிப். 1 - மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சங்கத்தின் மூத்த நிர்வாகி சிறுமுகை விநாயகம் காலமானார். தாராபுரம் அடுத்த இல்லியம்பட்டியில் பிறந்தவர் தோழர் விநாயகம் (78). சிறுமுகையில் உள்ள சௌத் இண்டியன் விஸ்கோஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். அப்போது, இடதுசாரி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு விஸ்கோஸ் சிஐடியு சங்கத்தில் நிர்வாகியாக பணியாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து இறுதிவரை செயலாற்றி வந்தார். துணைவியார் கா.சி.மோகனாம்பாள் காலமான பிறகு தனது மகன் வீட்டில் வசித்து வந்தார்.  இந்நிலையில் உடல் நலக்குறைவினால் சனியன்று இரவு 1 மணியளவில் விநாயகம் காலமானார். இவருக்கு மகன் டாக்டர் லெனின்பாபு, மகள் கல்பனா ராணி ஆகி யோர் உள்ளனர். மகன் லெனின்பாபு கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். மகள் கல்பனாராணி கரையூர் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வரு கிறார்.   தோழர் விநாயகம் மறைவு செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யூ.கே.வெள்ளியங்கிரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில  துணைப்பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம்,  சிபிஎம் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் ஆர்.வெங்கட்ராமன், பொன்னுச்சாமி, மேகவர்ணன் உள்ளிட்ட தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி னர்.