வியாழன், செப்டம்பர் 23, 2021

tamilnadu

img

திருப்பூர் உழவர் சந்தையில் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

திருப்பூர், ஏப். 3-திருப்பூர் தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தையில் புதன்கிழமை காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திருப்பூர் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.புதன்கிழமை காலை திருப்பூர் உழவர் சந்தைக்கு வந்த ஸ்டாலின் வேட்பாளர் கே.சுப்பராயன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோரை அழைத்துக் கொண்டு வந்து விவசாயிகள், காய்கறி வாங்க வந்த பொதுமக்களை ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். மக்கள் அங்கு அவருக்கு வரவேற்பளித்து இன்முகத்துடன் ஆதரவு தெரிவித்தனர்.இந்த நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.;