tamilnadu

img

காங்கேயம், வெள்ளகோவிலில் மே தின விழா

திருப்பூர், மே 3 -காங்கேயத்தில் சிஐடியு மற்றும் சார்பு சங்கங்கள் சார்பில் மே தின கொடியேற்று விழா எழுச்சியுடன் நடைபெற்றது.காங்கேயம் அய்யாசாமி வீதியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா அலுவலகம் முன்பாகவும், காங்கேயம் மின்வாரிய அலுவலகம் முன்பும், அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பும், பாரதியார் வீதியிலும், திருப்பூர் ரோடு சரக்கு வாகன நிறுத்தம் அருகிலும், புலிக்கல் மேடு பகுதியிலும் என ஆறு இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டது.இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் குமாரசாமி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கணேசன், போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகி வின்சென்ட், வாலிபர் சங்க நிர்வாகி தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் வெள்ளகோவில் வட்டாரத்தில் சிவநாதபுரம், மூத்தாம்பாளையம், தொட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் சிஐடியு சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன், பிஎஸ்என்எல் செல்லமுத்து, துரைசாமி மற்றும் பழனியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்று செங்கொடி ஏற்றி வைத்தனர். இந்த வட்டாரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், பொது மக்கள் பலர் விழாவில் பங்கேற்றனர்.