நாகப்பட்டினம், மே 4-மே தினத்தை ஒட்டி நாகப்பட்டினம் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் 22 இடங்களில் அந்தந்தச் சங்கங்களின் கொடிகள் ஏற்றப்பட்டு மே தினப் புரட்சி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிறைவாக நாகை அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப.அந்துவன சேரல், மாவட்டப் பொருளாளர் பா.ராணி ஆகியோர் தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார் மற்றும் பொருளாளர் வி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் சி.பாலசுப்பிர மணியன், செயலாளர் எம்.தமிழ்வாணன், பொருளாளர் மேகநாதன், மாவட்டத் துணைத்தலைவர் எஸ்.ஜோதிமணி, மாவட்ட இணைச் செயலாளர் கே.ராஜூ, ஓய்வூதியர் சங்கத் தலைவர்கள் சொ.கிருஷ்ணமூர்த்தி, எம்.பி.குணசேகரன், என்.பாபுராஜ், அரசு செவிலியர் சங்க மாவட்டத் தலைவர் ப.ஜீவானந்தம், சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் சி.கலியபெருமாள், அரசுப் போக்குவரத்து எஸ்.ஆர்.ராஜேந்திரன், ஏ.பஞ்சநாதன், சண்முகம் மற்றுநம் பல்வேறு சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்குக் கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சு.மணி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் சிறப்புரையாற்றினார். பொருளாளர் வி.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.