tamilnadu

img

குளத்தில் கொட்டப்படும் குப்பை: கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை

அவிநாசி, ஜன.22- அவிநாசி அருகே உள்ள  கருவலூர் குளத்தில் குப்பை களை கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற் படுவதால் உடனடியாக  அவற்றை அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.  அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவு  கொண்ட குளம் உள்ளது.  இக்குளத்தில் 5 ஆண்டு களுக்கு முன்பு பெய்த மழை யில் குளம் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஊராட்சியில் உள்ள ஆழ்துளை கிணறு களில் நீர்மட்டம் உயர்ந் ததால் விவசாயம் சிறிது காலம் செழிப்பாக இருந் தது. தற்போது இக்குளத்தில்  குப்பைகளை கொட்டி வரு கின்றனர். இதனால் அருகி லுள்ள விவசாயத்திற்கும், குடியிருப்போர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் தொற்று நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே உடனடியாக  குப்பைகளை  அகற்றி, குளத்தை தூர்வார  வேண்டுமென  பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரியை கேட்டபோது, இதுகுறித்து எங்களுக்கு தெரியாது. மற்ற அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் என்று தெரிவித் தார்.  இது சம்பந்தமாக சமூக  ஆர்வலர்கள்கூறுகையில், அவிநாசி பொதுப்பணித் துறை  அதிகாரிகளின் அலட் சியத்தால் தான் குளத்தில்  குப்பைகளை கொட்டப்படு கின்றன. எனவே உடனடி யாக திருப்பூர் மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.