திருப்பூர், மார்ச் 4- திருப்பூர் மாவட்டம், வே.கள்ளிபாளையம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கொள்ளை சம்பவம் நடை பெற்றதன் தொடர்ச்சியாக அனைத்து வங்கிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ் வாயன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தலைமையில் அனைத்து வங்கி மேலாளர்க ளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வங் கிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக் கள் பொருத்துதல், இரவு நேர பாதுகாவலர்கள் பின் பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், தானி யங்கி அலாரங்கள் மற்றும் தானியங்கி அழைப்பு கரு விகளை பொருத்துதல் பற்றி விரிவாக கலந்தாலோ சிக்கப்பட்டது. மேலும், கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந் தால் வங்கி ஊழியர்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும், வங்கிக்கு அரு கில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் இருப் பின் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித் தல், மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் எண் மூலம் குறுஞ்செய்தி அனுப்புதல் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தல் பற்றியும், வங்கி கட்டிடம், ஏடிஎம் மையங்களின் கட்டிட அமைப்புகள் பாதுகாப்பான முறையில் அமைந்திருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் இருக்கக்கூடிய வங்கிகளுக்கு அந்தந்த காவல் நிலை யம் மற்றும் காவல் நிலைய அதிகாரிகளின் தொலை பேசி எண்கள் வழங்கப்பட்டது. இதில் வங்கி கிளை மேலாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.