திருநெல்வேலி, ஆக 4- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் செவ் வாய்க்கிழமை 68 அடியாக உயர்ந்து. அணைக்கு வினாடிக்கு 4076கன அடி நீர் வந்து கொண்டு இருக்கின்றது.வழக்க மாக பாபநாசம் அணை ஜூன் மாதம் திறக்கப்படும். இந்தாண்டு மழை இல்லாமல் போனது. தற்போது பாபநாசம் அணை பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் கார் சாகுபடிக்கு புதனன்று ( ஆக -5) பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், கன்னடி யன் கால்வாயில்வர இருக்கிறது. இதன் மூலமாக ஆயி ரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.