tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

வாலிபர் தற்கொலை 

திருச்சிராப்பள்ளி, ஏப்.22- திருச்சி கீழபஞ்சப்பூர் பள்ளித்தெருவை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் நேரு(35) இவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கு வாய் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நேரு வீட்டில் உள்ள மின் விசிறியில் மனைவியின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


சிறுவனுக்கு கத்திக்குத்து:2 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, ஏப்.22- திருச்சி தென்னூர் சங்கீதபுரத்தை சேர்ந்தவர் தனசீலன் இவரது மகன் ஜீவா(15). அதே பகுதியை சேர்ந்தவர்கள் டேரிமினிக் சேவியர் (20), கிறிஸ்டோபர் அந்தோணி கமல்(24) இவர்கள் அனைவரும் நண்பர்கள். அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். சமீபத்தில் கிரிக்கெட் விளையாடும் போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜீவா சங்கீதபுரத்தில் உள்ள தனது வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டேரிமினிக் சேவியர், கிறிஸ்டோபர் அந்தோணிகமல் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ஜீவாவை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லை நகர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து டேரிமினிக் சேவியர், கிறிஸ்டோபர் அந்தோணிகமல் ஆகியோரை கைது செய்தனர்.


காரை சேதப்படுத்தியதாக 2 பேர் மீது வழக்கு

திருச்சிராப்பள்ளி, ஏப்.22- திருவானைக்காவல் மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் பாலச்சந்தர்(30) இவர் தனது வீட்டருகே தனக்கு சொந்தமான காரை நிறுத்தி இருந்தார். அதே பகுதியை சேர்ந்த 2 பேர் குடிபோதையில் வந்து காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலச்சந்தர் ஸ்ரீரங்கம் காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில் அப்பு (எ) பிரவீன், வசந்த் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.