செவ்வாய், செப்டம்பர் 21, 2021

tamilnadu

img

அறந்தாங்கி அடுத்த வைரிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

அறந்தாங்கி, ஏப்.7- அறந்தாங்கி அடுத்த வைரிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்குதலைமை ஆசிரியர் கோமதி தலைமை வகித்தார். நல்லாசிரியர் மன்றம் சுப்பையா, கராத்தே பிரதர்ஸ் சோசியல் சர்வீஸ் தலைவர் சுப்ரமணியன், நிர்வாகிகள் காசிநாதன் விஸ்வமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தான்குளம் ஸ்வாமி பாண்டியன் 31 ஆயிரம் மதிப்புள்ள ப்ரொஜெக்டர் ஆர்ஒசிஸ்டம் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் மீனாட்சி,நித்யா, கிருத்திகா, பார்த்திபராஜா, தமிழ்ச்செல்வி, உமாமற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

;