திருச்சியில் சாக்கடை கால்வாயில் விழுந்த 5 வயது சிறுவன் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பிரேம்குமார் நளினி தம்பதி அவரது மகன் 5 வயது சிறுவன் யஸ்வந்த். இந்நிலையில் இன்று 8 மணி அளவில் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் யஸ்வந்த் திடீரென மாயமானான். இதனால் பதட்டமடைந்த பெற்றோர் சிறுவனை தேடினர். அப்போது வீட்டின் அருகில் இருந்த சுமார் 5 அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயில் சிறுவன் யஸ்வந்த் பிணமாக கண்டெடுக்கப்பட்டான். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.