குடும்பத்தாருக்கு தெரியாமல் புதைக்கப்பட்டதாக புகார் விபத்தில் இறந்த மூதாட்டியின் உடல் 6 நாளுக்கு பின் தோண்டி எடுப்பு
தஞ்சாவூர், ஜன.24– தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி யை அடுத்த புனல்வாசல் பிலாக் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை (60), இவரது கணவர் ராமையா, ஒரு மகள், ஒரு மகன் ஏற்கனவே இறந்த விட்ட நிலையில், சாலையோரத்தில் குடிசை அமைத்து வசித்து வந்தார். இவ ரது மற்றொரு மகன் ராஜா துறவிக் காட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அஞ்சலை கடந்த 18 ஆம் தேதி, வீட்டின் அருகே உள்ள தேநீர் கடைக்கு, சென்ற போது அடை யாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், தலையில் படுகாயம் அடைந்து இறந்து விட்டார். இறந்த அஞ்சலையின் உடலை, அக்கிராமத்தை சேர்ந்த சிலர், அன்று நள்ளிரவு லோடு ஆட்டோவில் எடுத்துச் சென்று, ஒட்டங்காடு பகுதியில் உள்ள ஒரு கல்லறைத் தோட்டத்தில் புதைத்து விட்டனர். இந்த நிலையில், தாய் அஞ்சலை இறந்த விவகாரம், மகன் ராஜா விற்கு 19 ஆம் தேதி தெரியவர, பிலாக் கொல்லைமேட்டில் உள்ளவர்களிடம் சென்று கேட்டுள்ளார். ஊரில் யாரும் சரியான பதில் அளிக்கவில்லை. இதை யடுத்து, தனது தாயின் மரணத்திற்கு காரணமான வாகனத்தையும், அதில் சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்ய வேண்டுமெனவும் தனது தாயின் உடலை தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் தெரியாமல் நள்ளிரவில் புதைக்க வேண் டிய அவசியமென்ன, சம்பந்தப்பட்ட வர்களை கைது செய்ய வேண்டும் என திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, 6 நாள் கழித்து, வியாழக்கிழமை காலை, புதைக்கப்பட்ட அஞ்சலையின் அழுகிய உடலை, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிரகாசம் முன்னிலையில், மருத்து வர்களால், உடற்கூறாய்வு செய்யப் பட்டது.
எண்ணெய் பனை சாகுபடி செய்து லாபம் ஈட்ட வேளாண் அதிகாரி யோசனை
சீர்காழி, ஜன.24- எண்ணெய் பனை சாகுபடி செய்தால் ஏராளமான லாபம் கிடைக்கும் என்று வேளாண் இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே அரசூர் கிராமத்தில் சாகுபடி செய்துள்ள எண்ணெய் பனை பயிரை கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் நேரில் ஆய்வு செய்தார். வேளாண் துறை மூலம் 50 சதவிகித மானிய விலையில் எண்ணெய் பனை பயிருக்கு வழங்கப் பட்ட சொட்டு நீர் பாசன கருவியை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், கொள்ளி டம் பகுதியில் சம்பா மற்றும் தாளடி அறு வடைக்கு பிறகு அறுவடை செய்த வய லில் எண்ணெய் பனையை விவசாயிகள் சாகுபடி செய்யலாம். இதற்கு வேளாண் துறை மூலம் கன்றுகளுக்கு மற்றும் வயல் சீரமைப்புக்கும் எக்டேருக்கும் ரூ.12 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப் படுகிறது. அதனைத் தொடர்ந்து பராம ரிப்புக்காக தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எக்டேருக்கு ரூ 5 ஆயி ரம் வீதம் மானியம் வழங்கப்படுகிறது. எண்ணெய் பனை பயிர் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசன கருவி வாங்குவதற்கு விவசாயிக்கு எக்டேருக்கு ரூ 24 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஊடுபயிர் தொடர்ந்து 4 ஆண்டு கள் செய்வதற்கு ரூ 5 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. எண்ணெய் பனை ஒரு எக்டேருக்கு 140 கன்று நடவேண்டும். ஒரு கன்றுக்கு மற்றொன்றுக்கு இடையே 9 மீட்டர் இடைவெளியிட்டு நட வேண்டும். இந்த எண்ணெய் பனையை முறையாக பராமரித்து வந்தால் 4 முதல் 5 ஆண்டு களில் அறுவடைக்கு தயாராகும். ஒரு எக்டேருக்கு 25 முதல் 80 மெட்ரிக் டன் வரை எண்ணெய் பழம் கிடைக்கும். ஒரு பழக்குலை 20 கிலோ முதல் 100 கிலோ வரை இருக்கும். இந்தப் பழத்திலிருந்து 20 சதவிகிதம் எண்ணெய் எடுக்க முடி யும். மீதமுள்ள சக்கைகள் இயற்கை உரங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது. தென்னை மரங்களைப் போன்று நீண்ட காலங்கள் பயன் தரக் கூடியது. இந்த எண்ணெய் பனை 30 ஆண்டுக்கும் மேல் பயன் தரக் கூடியதாகும். எனவே எண்ணெய் பனை சாகுபடி செய்து விவ சாயிகள் அதிக லாபம் ஈட்டலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்தப் பகுதி வேளாண் உதவி அலுவலர்களை தொட ர்பு கொள்ளலாம் என்றார். வட்டார வேளாண் அலுவலர் விவேக், உதவி அலு வலர்கள் மகேஷ், பாலச்சந்தர் உட னிருந்தனர்.
ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில் பின்வாங்காதவர் தோழர் மொக்கராஜ் விவசாயத்தொழிலாளர் சங்க மாநிலக்குழு புகழஞ்சலி
சென்னை,ஜன.23- அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் மத்திய கவுன்சில் உறுப்பினரும் தேனி மாவட்டத் தலைவருமான தோழர் எஸ்.மொக்கராஜ் மறைவுக்கு சங்கத் தின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.லாசர், மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங் கல் செய்தியில் கூறியிருப்பதா வது: 1952 ஆம் ஆண்டில் பிறந்த தோழர் எஸ்.மொக்கராஜ் சிறு வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சி யின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு ஒன்றுபட்ட மதுரை மாவட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் பணியாற்றி, படிப்படியாக உயர்ந்து மதுரை மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் முடிவை ஏற்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக பல முத்திரை பதிக்கத்தக்க போரா ட்டங்களையும் நடத்தினார். ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறையை எதிர்த்த போராட்டத் தில் தோழர் மொக்கராஜ் பின் வாங்கியது இல்லை . அவரின் உறுதிமிக்க கொள்கை பிடி மானத்தையும் அவரின் போராட்ட நெஞ்சுறுதியையும் அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு நினைத்துப் பார்க்கிறது. விவ சாய தொழிலாளர்களின் கூலி பிரச்சனை மட்டுமல்லாது, ஆண்டிபட்டி, சின்னமனூர் பெரிய குளம், கடமலைக்குண்டு, போடி தேவாரம் போன்ற பரந்து பட்ட இடங்களில் மக்களுக்கு வாழ்வு அளிக்க - பாதுகாப்பு அளிக்கக் கூடிய பல போராட்டங்களை நடத்தினார். தோழர் எஸ்.மொக்க ராஜ் அவர்களுக்கு விஜயா என்ற மனைவியும் விமோசினி என்ற மகளும் உள்ளனர்.
தோழர் கே.குணசேகரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பி னரும் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளருமான தோழர் கே.குணசேகரன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இராமநாதபுரம் மாவட்டத் தில் விவசாயத் தொழிலா ளர்களையும் குறிப்பாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் விவசாய தொழிலா ளர்களை திரட்டி, வேலை மற்றும் கூலி கேட்டு பல போராட்டங் களை நடத்தியவர். அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தோழர் குணசேக ரன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பள்ளிப் பரிமாற்ற நிகழ்ச்சி
நாகப்பட்டினம், ஜன.24- பள்ளிப் பரிமாற்ற நிகழ்ச்சியில் நாகை அருகே யுள்ள கீச்சாங்குப்பம் ஊரா ட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் கலசம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவ மாணவியர் ஒருங்கி ணைந்து வியாழக்கிழமை நாகையில் உள்ள அரசு மீன்வளப் பல்கலைக்கழ கத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் மீன் பதப் படுத்தும் முறையைக் கண்டறிந்தனர். மேலும் நாகைத் தோணித் துறை மீன்பிடி படகு தளம், மீனவர்கள் மீன்பிடிக்கும் செயற்பாடு களையும் நேரில் கண்டறிந்த னர். தலைமை ஆசிரியரும் நல்லாசிரியர் விருது பெற்ற வருமான இரா.பாலு மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.