வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

சோலார் மின் உற்பத்தி துவக்க விழா

திருச்சிராப்பள்ளி, ஏப்.27-திருச்சி விமான நிலையத்தில் 1 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி தொடக்க விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதை அகில இந்திய விமான நிலைய ஆணையத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை உறுப்பினர் அனுஸ்அகர்வால் தொடங்கி வைத்தார். விமான நிலைய இயக்குனர் குணசேகரன் துணை பொதுமேலாளர் பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 2 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டன.

;