tamilnadu

சீர்காழி மற்றும் கரூர் முக்கிய செய்திகள்

கொள்ளிடம் அருகே குழாய் உடைந்து  2 மாதமாக வீணாகும் குடிநீர்

சீர்காழி, ஜூன் 19- கொள்ளிடம் அருகே ஓலையாம்புத்தூரில் கூட்டுக்குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2 மாதமாகியும் சரி செய்யாத தால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஒலையாம்புத்தூர் நடுநிலைப்பள்ளி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்ட குழாய் செல்கிறது. வடரெங்கத்திலிருந்து கூட்டு குடி நீர்த்திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப் படும் தண்ணீர் சக்தி வாய்ந்த மின்மோட்டார் மூலம் கொள்ளி டம் ஆற்றின் கரையோரகிராமங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த குழாய் குன்னம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த பிரதான குழாய் ஓலையாம்புத்தூரில் சாலையோரம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. இக்குழாய் மூலம் எப்போதும் வெளியேறிய வண்ணம் இருப்ப தால் சேர வேண்டிய உரிய தண்ணீர் கிராமங்களுக்கு போய் சேருவதில் தடை ஏற்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை சரி செய்யாததால் அதிக அளவு குடிநீர் வீணாகிறது. எனவே குழாயை சரி செய்து குடிநீரை சேமிக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்த வலை மூலம்  பிடித்த மீன்கள் லாரி பறிமுதல்

10 பேர் மீது வழக்கு  
சீர்காழி, ஜூன் 19- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஒரு தனியார் லாரியில் தடை செய்யப் பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை ஏற்றிக் கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருப்ப தாக கிடைத்த தகவலின் பேரில் சீர்காழி மீன்வளத்துறை உதவி இயக்குநர் நடராஜன், பழையாறு மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் தீனதயாளன், மேற்பார்வையாளர்கள் தியோ டர்ராஜ், லட்சுமிகாந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் விரைந்து வந்து பன்னீர்கோட்டகம் சோதனை சாவடியில் லாரியை மடக்கினர். ஆனால் அதையும் மீறி லாரி சென்று கொண்டிருந்தது.  சிதமபரம் அருகே சென்று கொண்டிருந்த மீன் லாரியை சிதமபரம் தாசில்தார் உதவியுடன் மடக்கி பிடித்து மீண்டும் கொள்ளிடம் கடைவீதியில் அதிகாரிகள் கொண்டு வந்து நிறுத்தி டிரைவரிடமிருந்து சாவியை பறித்தனர். அப்போது கொள்ளிடம் கடைவீதியில் நின்ற லாரி அருகே வந்த கொள்ளி டம் ஒன்றிய அதிமுக செயலாளர் நற்குணன் சிலருடன் அங்கு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்காமல் மீன் ஏற்றி வரும் லாரியை ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள் என்று கேட்டு அதிகாரியிடமிருந்த லாரி சாவி யை பறித்து டிரைவரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.  இது குறித்து சீர்காழி மீன்வளத்துறை உதவி இயக்குநர் நடராஜன் கொள்ளிடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், நற்குணன் மற்றும் பழையாறு மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி, அன்புத்தம்பி, எம்.எஸ்.காந்தி உள்ளிட்ட 10 பேர் மீது  அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அத்துமீறி நடத்தல், மிரட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோடி செய்த 2 பேர் கைது 

கரூர், ஜூன் 19- கரூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்த பணத்தில் சொகுசு வீடு கட்டியும் சொகுசு கார்களில் உலா வந்த வணிகவரித்துறை ஓட்டுநர் கைது. கரூர் காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் டிவன்காந்த் (39). இவர் கரூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். 18-க்கும் மேற்பட்ட நபர்களி டம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி, அந்த பணத்தில் காந்தி கிராமம் பகுதியில் சொகுசு வீடு கட்டி வரு வதாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கரூர் காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்த னர். இதே போல் கிருஷ்ணராயபுரம் தாலுகா திருக்காம்புலி யூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதின் அடிப்படை யில் மாயனூர் காவல்துறையினர், அவரை கைது செய்து சிறை யில் அடைத்தனர்.