புதிய அமைப்பு துவக்கம்
கும்பகோணம் ஜூன் 29- கும்பகோணம் சரகத்தில் 300-க்கும் மேற்பட்ட போட்டோ, வீடியோ கலைஞர்கள், ஸ்டுடியோக்கள் உள்ளன. இருந்த போதிலும் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக அரசு அங்கீகாரத்துடன் ஒரு சங்கம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து தமிழ்நாடு போட்டோ வீடியோகி ராபர்ஸ் அசோசியேசன் என்ற பெயரில் குடந்தையைச் சேர்ந்த தபா.செந்தில்ராஜ், எம்.கே.சிவக்குமார் ஆகியோர் துவங்கினர். இந்த அமைப்பு அரசு பதிவு பெற்று இயங்க ஆயத்தமாக உள்ளது.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கரூர், ஜூன் 29- கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 255 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரி வீல் சேர், முடநீக்கு சாதனங்கள், தையல் இயந்திரம் என ரூ.37 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். இதன்பின் அவர் கூறுகை யில், அம்மா வாட்டர் தயாரிக்கும் இயந்திரங்கள் பழுத டைந்துள்ளதால் இயந்திரங்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தவறான செய்திகள் வெளி வருகிறது. அம்மா குடிநீர் தயாரிக்க பயன்படுத்தும் நீரை தவறான வழியில் பயன்படுத்துவதாக கூறப்படுவது போன்ற சூழல் இங்கு எதுவும் இல்லை என்றார்.