தஞ்சாவூர், ஜூலை 19- தஞ்சை அருகே ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவர் பலியானான். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை காலை மேலத் திருப்பூந்துருத்தியிலிருந்து ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சை யிலிருந்து அரசுப் பேருந்து கழுமங்கலம் நோக்கி சென்ற போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த மேலத்திருப்பந்து ருத்தி வரதராஜபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஐங்கரன்(11), 6-ஆம் வகுப்பு மாணவர் மற்றும் கீழத்திருப்பந்துருத்தி பிள்ளையார் கோவில் தெரு வைச் சேர்ந்த சுப்பிரமணி மகள் சந்தியா(14), 9-ஆம் வகுப்பு மாணவி ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் திருவை யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட னர். அங்கு மாணவர் ஐங்கரன் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மாணவி சந்தியா, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களை நடுக்காவிரி காவல்துறையினர் தேடி வருகின்றனர். காட்டுக்கோட்டை பாதையின் அருகில் வளைவு உள்ள தால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகள் ஏற்படுவதை தடுக்க இப்பகுதியில் வேகத் தடை அமைக்க வேண்டும், ஆட்டோவில் அதிக நபர்களை ஏற்றி செல்வதாலும், ஓட்டுநர்கள் செல்போனில் பேசிக் கொண்டு செல்வதாலும் இதுபோன்ற விபத்துகள் நடை பெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.