தரங்கம்பாடி, ஏப்.1-
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பொறையார் அருகே காட்டுச்சேரி முக்கூட்டில் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் வாக்குச் சேகரிப்பை ஞாயிறு மாலை தொடங்கினார். திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் மாலிக் தலைமையில் காட்டுச்சேரி, ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி, பூதனூர், விசலூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், எரவாஞ்சேரி, திருவிளையாட்டம், நல்லாடை உள்ளிட்ட பகுதிகள் வழியாக திறந்த வேனில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அவரை ஒவ்வொரு கிராமத்திலும் கூடி இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிம்சன், கலைச்செல்வி, இராசையன், ரவிச்சந்திரன் மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், வாலிபர், மாதர், மாணவர் சங்க நிர்வாகிகள், திமுக மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன், காட்டுச்சேரி சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சித்திக், அருள்செல்வன், மதிமுக, சிபிஐ, விசிக, காங்கிரஸ்,உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக காட்டுச்சேரி முக்கூட்டில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பட்டாசு வெடித்து, உற்சாகமுழக்கமிட்டு வேட்பாளரை வரவேற்றனர்.