தேசிய கல்விக் கொள்கை ஜூலை 13 நாகையில் கருத்தரங்கு
நாகப்பட்டினம், ஜூலை 11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழுக்கூட்டம், ஜூலை-13, 14 ஆகிய இரு நாட்கள், நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள யாழிசை அரங்கத்தில் நடைபெறுகிறது. அதையொட்டி ஜூலை-13, மாலை 6 மணிக்கு “என்ன செய்ய வருகிறது, தேசியக் கல்விக் கொள்கை?” எனும் பொருளில் தெளிவரங்கு நடைபெறுகிறது. த.மு.எ.க.ச. மாநில கெளரவத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையேற்கிறார். நாகை மாவட்டச் செயலாளர் ப.பாலசுந்தரம் வரவேற்கிறார். முன்னாள் துணைவேந்தர் லெ.ஜவகர்நேசன், கல்வியுரிமைச் செயற்பாட்டாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, த.மு.எ.க.ச. மாநிலப் பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோர் கருத்துரையாற்று கின்றனர். நாகை மாவட்டத் தலைவர் ந.காவியன் நன்றி கூறுகிறார்.
பொன்னமராவதியில் மின் நிறுத்தம்
பொன்னமராவதி, ஜூலை 11- பொன்னமராவதி ஒன்றியம் கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் ஜூலை 12-ம் காலை 9 முதல் மாலை 6 மணி வரை வலையபட்டி, கொப்பனாப்பட்டி, செம்பூதி, கொன்னைப்பட்டி, சுந்தரம், கோவணூர், செவலூர், மேலநிலை, வேகுப்பட்டி, குழிபிறை, ஏனாதி, பிடாரம்பட்டி, வேந்தன்பட்டி, தொட்டியம்பட்டி, ஆலவயல், கண்டியா நத்தம், கல்லம்பட்டி, நகரப்பட்டி, அம்மன்குறிச்சி, காரையூர் மேலைத்தானியம், தூத்தூர், மைலாப்பூர் உள்ளிட்ட பகுதி களில் மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் ராமநாதன் கூறியுள்ளார்.
நிலத்தடி நீர் விழிப்புணர்வுப் பேரணி
புதுக்கோட்டை, ஜூலை 11- நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்த ஜல்சக்தி அபியான் திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழ மையன்று புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்திலி ருந்து தொடங்கியது. இதனை, மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, ஜல்சக்தி அபியான் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மணிஷா சென்ஷர்மா, ஆலீஸ் ரோஸ்லின் டேடே ஆகியோர் தலைமையேற்று தொடங்கி வைத்தனர். ஊர்வலம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம் வழியாக நகர்மன்றத்தை வந்தடைந்தது. இதில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மக்கள் தொடர்பு முகாம்
புதுக்கோட்டை, ஜூலை 11- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோட்டம், மணமேல்குடி வட்டம், நிலையூர் கிராமத்தில் 18-ம் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற வுள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்து மனு செய்து பயனடையலாம் என ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கரூர் பரணி பள்ளியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு
கரூர், ஜூலை 11- கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளியில் இந்தியா- ஜப்பான் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு வியாழனன்று நடைபெற்றது. இதில் ஜப்பானிய கல்வி ஆராய்ச்சியாளர் ஹயாத்தோ கலந்து கொண்டார். இவர் துவக்க வகுப்புகளில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே உள்ள கல்வி முறையை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஜப்பான் பள்ளிகளை ஒப்பிடும் போது பரணி வித்யா லயா பள்ளியில் குழந்தைகளுக்கு எழுதும் வேலை மிக வும் குறைவாகவே உள்ளது. இந்திய குழந்தைகள் மகிழ்வாக கல்வி கற்கிறார்கள். இந்திய மண்ணில் பிறந்த குழந்தைகளாகிய நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று கூறினார். மேலும் தங்களது கலாச்சாரத்தை விளக்கும் வகையில் ஜப்பான் பாடலை பாடி, ஜப்பானிய முறை யான “கெண்டோ” சிலம்பம் சுற்றினார். பரணி வித்யாலயா மாணவர்கள் நமது கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகை யில் பரதநாட்டியம், கிராமிய நடனம், சிலம்பம், தப்பாட்டம் ஆடினர். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்ரமணியன், நிர்வா கக்குழு உறுப்பினர் சுபாஷினி, ஜப்பானிய மொழி பயிற்று நர் தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் சுதாதேவி வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் பிரியா நன்றியுரையாற்றினார்.