2ஆம் பக்கத் தொடர்ச்சி
மன்னார்குடி
மன்னார்குடி நகராட்சி மற்றும் துப்புரவுப் பணியாளர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிங்கார. விஜய குமார் தலைமை வகித்தார். எஸ்.பாலச்சந்தர், டி.எஸ்.கணேசன் உள்ளாட்சி சிஐடியு சங்க கிளைத் தலைவர் ஜி.ரெகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி தலைமை அஞ்சலகம் முன்பு நடை பெற்ற மறியலில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.ரெகு பதி, உள்ளாட்சித்துறை சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. முனியாண்டி சிஐடியு ஆர்.மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மறியலுக்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் வி.மாரிமுத்து தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.கே.எஸ் கலியபெருமாள், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர், துணைச் செயலாளர் பி.கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருத்துறைப்பூண்டி தபால் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.மாலதி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.சந்திரசேகர ஆசாத் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிஐடியு நன்றி
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்த அனைத்து தரப்பினருக்கும் சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் நன்றி தெரிவித்துள்ளார்.