திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

மரக்கன்று வழங்கும் விழா

மன்னார்குடி, ஏப்.12-மயிலாடுதுறை ஏ.வி.சி.பொறியியல் கல்லூரி மின்னியல்மற்றும் மின்னணுவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள்அரவிந்த் குமார், பாலாஜி, ராஜ்குமார், வினித், அசோக்குமார்,ரவிராகுல், தளபதி பிரபாகரன், கிருபாநிதி, நாகேந்திரன், நந்தக்குமார், விஸ்வநாதன், முகமதுசித்திக் ஆகிய 12 பேர் இணைந்து மின்னணுவியல் துறை தலைவர் ரவி மேற்பார்வையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், சூரியமின்சக்தி மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் நவீன காரை தயாரித்துள்ளனர்.நிகழ்ச்சியில் துறை தலைவர் ரவி, ஆய்வக உதவியாளர்சிவபிரகாஷ் மற்றும் சாதனை மாணவர்களை ஏ.வி.சி கல்விநிறுவனங்களின் தலைவர் விஜயரங்கன், செயலாளர் கார்த்திகேயன், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் செந்தில்முருகன், முதல்வர் அருள்ஸ்ரீ, டீன் பிரதீப், துணை முதல்வர் செல்வகுமரன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை இயக்குனர் விஜயராஜ் ஆகியோர் பாராட்டினர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், 3 பேர் வரைபயணம் செய்யும் வகையில், சூரிய மின்சக்தியை பயன் படுத்தி சார்ஜ் செய்து 40 கிலோ மீட்டர் வேகத்தில் 50 கிலோமீட்டர் வரை சோலார் காரில் தடையின்றி பயணிக்கலாம் என்றனர்.

;