tamilnadu

திருச்சி ,தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனை வைரஸ் கிருமிகள் கண்டறியும்  பரிசோதனை மையம் திறப்பு

திருச்சிராப்பள்ளி,ஜூலை,25- திருச்சி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நுண்ணுயிரியல் துறையின் மூலம் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், நோயின் வீரியத்தை கண்டறியவும் பரிசோ தனைகள் மேற்கொள்ள ஏதுவாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு வசதிகள்  செய்யப்பட்டுள்ளது.  தற்போது புதிதாக சிடி 4 செல் எண்ணிக்கை மற்றும் வைரஸ் அளவீட்டு பரிசோதனை மையம் ரூ 1கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டது. இம்மையத்தினை மருத்து வமனை முதல்வர் சாரதா திறந்து வைத்து நவீன உபகரணங்களையும் அதன் செயல்பாடுகளையும் நுண்ணியல் துறை மருத்துவர்களுடன் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் சாரதா கூறியதாவது: நோ யாளிகளின் எதிர்ப்பு சக்தி எண்ணிக்கை யினை தெரிந்து கொள்ள சிடி4, சிடி8 பரிசோதனையினை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வைரஸ் அளவீட்டு பரிசோதனை மையம் மூலம் நோயாளியின் உடலில் ரத்தத்தில் உள்ள எச்ஐவி வைரஸ் வீரியத்தை ஆர்என்ஏ சோதனை மூலம் தெரிந்து கொண்டு அதன் மூலம் அவர்களுக்கு சரியான வகையில் சிகிச்சை அளிக்கவும், அதன் மூலம் அவர்கள் தங்களது சிகிச்சையினை தொடரவும் வழிவகுத்துள்ளது.  இது எச்ஐவி மருத்துவ சிகிச்சையில் ஒரு மைல்கல், கோவை, திருச்சி மதுரையில் தொடங்க திட்டமிடப்பட்டு கோவை மற்றும் திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இது திருச்சியை சுற்றியுள்ள மாவ ட்டங்களுக்கு பயனுள்ளதாக அமையும். ஏஆர்டி மையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நோயின் வீரியத்தை கண்டறிய மருத்துவ அலுவலர் விரும்பும் பட்சத்தில் ரத்தத்தினை அனுப்பி பார்கோடு வசதியுடன் பரிசோதனை செய்து அதன் மூலம் அவர்களுக்கு உரிய சிகிச்சையினை அளிக்கலாம் என்றார்.

 

பாலியல் வன்கொடுமை வழக்கில்  ஒருவருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர், ஜூலை 25- கும்பகோணத்தில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஏ.ஆர்.ஆர்.காலனியை சேர்ந்தவர் அடைக்கலம்(59), துப்புரவு தொழிலாளி. இவர் 2015 ஆம் ஆண்டு மே மாதம் தனது வீட்டுக்கு டி.வி. பார்க்க வந்த 15 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தார். இதைக் குடித்த சிறுமி மயக்கமடைந்தார். அப்போது, இச்சிறுமியை அடைக்கலம் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால், அச்சிறுமி கர்ப்பம் அடைந்தார். பின்னர், அவருக்குக் கர்ப்பம் கலைந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அடைக்கலத்தை கைது செய்தனர்.இதுதொடர்பாக தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எழிலரசி விசாரித்து, அடைக்கலத்துக்கு ஆயுள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். 

கண் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர் ஜூலை.25- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்து வமனை, அதிராம்பட்டினம் ஷிபா மருத்து வமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் அதிராம்பட்டினம் ஷிபா  மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது. முகாமிற்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்கச் செய லர் சேக்கனா எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம்.முகமது முகைதீன், நிர்வாக அலு வலர் எம்.நெய்னா முகமது, அதிராம்ப ட்டினம் ஷிபா மருத்துவமனை நிர்வாக இய க்குநர் முகமது இம்தியாஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் மேற்பா ர்வையாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் கே.ஸ்ரீராம் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்து வக் குழுவினர் 815 பேருக்கு கண் பரி சோதனை செய்ததில், 103 பேருக்கு கண்புரை நோய் இருப்பது கண்டறியப்பட்டு,  அறு வைச் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்ப ட்டது. மலிவு விலையில் 120 பேருக்கு மூக்குக்  கண்ணாடி வழங்கப்பட்டது. முகாம் காலை 8  மணிக்கு தொடங்கி  மாலை 5 மணி வரை நடந்தது. முகாமில், லயன்ஸ் சங்க மாவட்டத் தலை வர்கள் பேராசிரியர் எஸ்.பி.கணபதி, பேரா சிரியர் கே.செய்யது அகமது கபீர், எஸ்.ஏ. அப்துல் ஹமீது, எம்.அகமது, பேராசிரியர் கே.முருகானந்தம், ஆர்.செல்வராஜ், என்.ஆறுமுகச்சாமி, எம்.அப்துல் ரஹ்மான், எம்.முகமது அபூபக்கர், என்.உதயகுமார், எம்.அகமது கபீர், எஸ்.அகமது ஜூபைர், ஏ.வரிசை முகமது, முகமது அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;