tamilnadu

திருச்சி, புதுக்கோட்டை ,சென்னை முக்கிய செய்திகள்

தாட்கோ பயனாளிகளின் சொத்து உருவாக்கம் ஆய்வு
திருச்சிராப்பள்ளி, ஜன.11- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தாட்கோ, மாவ ட்ட மேலாளர் அலுவலகத்தின் மூலம் ஆதிதிராவிடர் மக்களின்  பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  தாட்கோ மூலம் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து சென்னை தாட்கோ மேலாண்மை இயக்கு நர் விஜயராணி கடந்த ஜன.8 அன்று திருச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பயன் பெற்ற பயனாளிகளின் சொத்து உரு வாக்கத்தினை நேரில் கள ஆய்வு செய்தார். அதில் பய னாளியிடம் தாட்கோ மூலம் வழங்கப்படும் திட்டங்கள் (நிலம்  வாங்குதல், நிலம் மேம்பாடு, கிணறு அமைத்தல், ஆழ்கு ழாய்க் கிணறு, துரித மின் இணைப்பு பெறுதல் திட்டங்களில் பய னடையும் வகையிலும், தாங்கள் பயனடைந்த விவரத்தி னை நண்பர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் கிராம மக்க ளுக்கும் எடுத்துரைத்து தாட்கோ மூலம் வழங்கப்பட்டு மானி யத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற்று ஆதிதிராவிட மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அறிவுரை வழங்கினார். வேளாண்மை துறையினை அணுகி பயனடையுமாறும் தெரி வித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு உயர் வழிகாட்டல் நிகழ்ச்சி
அறந்தாங்கி, ஜன.11- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக மாணவர்கள் உயர்வழிகாட்டல் நிகழ்ச்சி அறந்தாங்கி  செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மேல்கல்வி பயில உள்ள அனைத்து துறைகளை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி துணை ஆளுநர்  கராத்தே கண்ணையன் மற்றும் பள்ளி தாளாளர் கண்ணை யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு  விருந்தினர்களாகவும், வழிகாட்டல் நிகழ்வினையும் அறந்தாங்கி வட்டாட்சியர் சூரியபிரபு, புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை  வேலை வாய்ப்பு அலுவலர் வேல்முருகன், ஆவுடையார்கோ வில் வட்டாட்சியர் மார்டின் ஆகியோர் இணைந்து வழங்கினர்.


மக்காச்சோளம் பண்ணை விலை
புதுக்கோட்டை, ஜன.11- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் ஆய்வுகளின் அடிப்ப டையில், தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குவிண்டாலுக்கு ரூ.1,800 முதல்  ரூ.1,900 வரை இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய  ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்க  வேண்டும்.

பொன்னமராவதி ஒன்றியத் தலைவர் திமுக வேட்பாளர் தேர்வு
பொன்னமராவதி, ஜன.11- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு பெருந்தலை வருக்கான தேர்தல் திமுக சார்பில் சுதா அடைக்கலமணி, அதிமுக சார்பில் அழகு ரெத்தினம் ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகிருஷ்ணன், வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் வேலு, சாமிநாதன் ஆகியோர் வெற்றி  அறிவிப்பினை வெளியிட்டனர். இதில் பொன்னமராவதி ஒன்றி யக்குழு பெருந்தலைவருக்கான பதவிக்கு திமுகவின் சுதா அடைக்கலமணி வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற சுதா  அடைக்கலமணிக்கு திமுக பொன்னமராவதி குழு சார்பில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் சால்வை அணிவித்து பாராட்டினர். அதனைத் தொடர்ந்து துணைச் சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. பொன்னமராவதி ஒன்றியக்குழு துணைத்தலைவராக திமுக சார்பில் போட்டியிட்ட ஆல வயல் தனலெட்சுமி அழகப்பன் 9 வாக்குகள் பெற்று வெற்றி  பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட  சுந்தர்ராஜ் என்ற செந்தில் 6 வாக்குகள் பெற்றுள்ளார்.

சிமெண்ட் தரைகளுக்கான கிருமி நாசினி அறிமுகம் 
சென்னை, ஜன. 11- லைசால் நிறுவனம் சிமெண்ட் தரைகளுக்கான கிருமி நாசி னியை சென்னையில் அறிமுகம் செய்தது. 2011 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெடு ப்பின்படி, 3 இல் 1 என இந்திய வீடுகளில் சிமெண்ட் தரை  உள்ளது. 3 இல் 2 வீடுகள் சிமெண்ட் தரைகளாகக் கொண்ட  மிகப்பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. விரிவான நுகர்வோர் ஆராய்ச்சியின் போது, பெரும்பா லான சிமெண்ட் தரைகளில் பொதுவாகக் காணப்படும் வெள்ளைத் திட்டுகள், கறைகளை அகற்றுவது, இந்திய இல்ல த்தரசிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. கால்சியம் ஹைட்ராக்சைடால் ஆன சிமெண்ட் தரை, காற்றில்  உள்ள கார்பன் டை ஆக்சைடுடன் வினைபுரிந்து வெள்ளை நிற த்தில் காணப்படும் கால்சியம் கார்பனேட் உப்பை உருவாக்கு கிறது. இந்த உப்பின் எச்சங்கள் சிறிது சிறிதாக சிமெண்ட் தரை களில் உள்ள துளைகள் மற்றும் பிளவுகளுக்குள் குடியேறி  வெள்ளைக் கறைகளை உருவாக்குகின்றன.இந்த உப்பு களைக் கரைக்க இந்த கிருமி நாசினி அறிமுகம் செய்யப்பட்டுள்ள தாக ஆர்.பி. ஹைஜீன் ஹோம் தெற்காசியா நிறுவனத்தின் நிர்வாகி சுக்லீன் அனேஜா தெரிவித்தார்.

;