tamilnadu

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

கொத்தங்குடியில் நெல் கொள்முதல்  நிலையம் திறக்க கோரிக்கை  

கும்பகோணம், ஜூலை 1-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் கொத்தங் குடி மற்றும் திருப்புறம்பியம் கிராமங்களில் சுமார் 100 ஏக் கர் நஞ்சை நிலத்தில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் விவ சாயிகள் அறுவடை நெல்லை, அரசு கொள்முதல் நிலை யங்கள் இல்லாததால் தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் சூழ்நிலை நிலவி வரு கிறது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. கொத்தங்குடியில் நுகர்பொருள் வாணிபக் கழ கத்திற்கு சொந்தமான கட்டடம் இருந்தும் இன்னும் கொள் முதல் நிலையம் தொடங்கப்படவில்லை. அதே போல திருப்புறம்பியம் பகுதியிலும் கொள்முதல் நிலையம் இல்லை. அறுவடை நெல்லை அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கு உடனடியாக கொத்தங்குடி மற்றும் திருப்புறம்பியம் பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் விதொச மாநிலக்குழு உறுப்பினர் சி. நாகராஜன் தலைமையில் கும்பகோணம் கோட்டாட்சியர் வீராச்சாமியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதில் விவசாயிகள் விசுவநாதன், மதியழகன் செல்வராஜ் ரவி சுப்ரமணியன் சேகர் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயி கள் கலந்து கொண்டனர்.

வீணாகி வரும்  பறிமுதல் வாகனங்கள்

தஞ்சாவூர், ஜூலை 1- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பிடிபட்ட ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல லட்சம் ரூபாய் மதிப்பி லான இருசக்கர வாகனங்கள் மற்றும் டயர் வண்டிகள் மழையிலும், பனியிலும் வீணாகி வருகிறது.  எவ்விதமான பாதுகாப்பும் இல்லாத நிலையில் வாக னங்களின் உதிரி பாகங்கள் திருடு போகும் அபாயம் உள்ளது. எனவே இந்த வாகனங்களை ஏலம் விடுவது அல்லது வழக்குகளை விரைந்து முடித்து உரிமையாளர் களிடம் ஒப்படைப்பது என அதற்குரிய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறையினர் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

அரசு மருத்துவமனையில் தெருநாய்கள் தொல்லை

தஞ்சாவூர், ஜூலை 1-  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.  இங்கு தினமும் 850 முதல் ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெற வருகின்றனர். இது தவிர 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். 33 பிரிவுகள் செயல் பட்டு வருகிறது.  நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற பத்துக்கும் மேற்பட்ட வார்டுகளில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் எனத் தனித் தனியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யின் வார்டுகளில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள பெண்களுக்கான 15 ஆவது வார்டு, ஆண்களுக்கான 16 ஆவது வார்டுகளின் வராண்டாவில் எப்போதும் நாய்கள் உலா வருகிறது. பொதுமக்கள் சாப்பிட்டு விட்டு மீதமாகும் உணவுகளை உண்பதற்காக வார்டுகளையே சுற்றி வலம் வருகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 10 மின் மோட்டார்கள் பறிமுதல்

கும்பகோணம், ஜூலை 1-  கும்பகோணம் நகராட்சி 5-வது வார்டில் உள்ள வீடு களில் குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து நகராட்சி ஆணையர்(பொ) ஜெகதீசன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சட்டவிரோதமாக மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சு வது தெரிந்தது. இதையடுத்து பல்வேறு வீடுகளில் பொரு ந்தியிருந்த 10 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. குடிநீர் முறைகேட்டில் ஈடுபட்டால்  வீட்டு குடிநீர் இணைப்பு நிரந்தரமாக  துண்டிக்கப்பட்டு கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

;