tamilnadu

குடவாசல்,பெரம்பலூர்,சீர்காழி மற்றும் அறந்தாங்கி முக்கிய செய்திகள்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் 


குடவாசல், ஏப்.16-குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை திரைப்பட இயக்குனர் ராஜுமுருகன், நாகை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் வேட்பாளர்எம்.செல்வராசு ஆதரித்து பேசும்போது, மோடி அறிவித்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கையில் உண்மை நிலை தற்போது ஊடகங்களில் வெளி வந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து அச்சடித்து வந்த 2000 ரூபாய் நோட்டை மாற்றி மெகா ஊழல் செய்த மோடி தலைமையிலான பிஜேபி அரசின் மோசடியை மோசடியை மக்களிடம் எடுத்துரைத்தார்.இதே போல் கொரடாச்சேரி ஒன்றியத்தில், திருவாரூர்தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் பூண்டி.கே.கலைவாணனுக்கும், நாகை தொகுதி வேட்பாளர் எம்.செல்வராசுக்கும் திமுக மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் கடை வீதியில் கொரடாச்சேரி, கூத்தாநல்லூர் இடங்களில் கூடி இருந்த பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.


பெரம்பலூரில் வாக்குச் சேகரிப்பு 


பெரம்பலூர், ஏப்.16-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பெரம்பலூர்நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து, வாகை.சந்திரசேகர் எம்.எல்.ஏ. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் வல்லாபுரம்,பிரம்மதேசம், குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு தொல்லை கொடுக்கும் மோடி, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி முடியட்டும் என பேசி அவர் வாக்குகள்சேகரித்தார். பிரச்சாரத்தில் மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.செல்லதுரை எஸ்.பி.டி.ராஜாங்கம், ஐ.ஜே.கே மாவட்டத் தலைவர்அன்பழகன், மதிமுக ஜெயசீலன், உள்ளிட்ட தோழமை கட்சிகள் திரளாக கலந்து கொண்டனர். 


மரக்கன்றுகள் வழங்கல் 


சீர்காழி, ஏப்.16-கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசியஊரக வேலை உறுதி திட்டத்தின் கிழ் புளி, பூவரசு, நெல்லி,வேம்பு, மலைவேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளும், சுற்றுப்புறத்தை தூய்மையாக்கும் விதத்தில் கொசு விரட்டியாகப் பயன்படும் நொச்சி செடியும் தினந்தோறும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரக்கன்றுகள் அரசு சார்பில்கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொள்ளும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. வீடுகளை கட்டி முடித்த பிறகே பயனாளிகளுக்கு, அவர்கள் விரும்பும் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.


கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பிரச்சாரம்


அறந்தாங்கி, ஏப்.16-சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அறந்தாங்கி ஒன்றியம் மேற்பனைக்காடு நெய்வதளி உள்பட பல ஊர்களில் வாக்குகேட்டு சிபிஎம் பெரி குமாரவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கசெல்வராஜ், திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் வடிவேலு, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார்அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் செங்கோடன் சிபிஐ மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் கூட்டணிநிர்வாகிகள் பிரச்சாரம் செய்தனர்.

;