tamilnadu

ஜன.8 அகில இந்திய வேலைநிறுத்த  ஆலோசனை கூட்டம்

 திருச்சிராப்பள்ளி: பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை திரும்பப் பெற வேண்டும்.  ஆன்லைன் வர்த்தகத்தை முழுவதும் தடை செய்து சிறு-குறு வணிகர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டும். மோட்டார் வாகன தொழிலை சீரழிக்கும் சாலை போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.  அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை அல்லது குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தம் குறித்து திருச்சி காந்தி மார்க்கெட் உருளைக்கிழங்கு, வெங்காய மண்டி, சிஐடியு, எல்பிஎப், எல்எல்எப், டியுசிசி சுமைப்பணி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  தொமுச மாவட்ட துணைச் செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். எல்எல்எஃப் மாநிலச் செயலாளர் பிரபாகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் ராமர், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் குணசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் குமார், மாவட்ட துணைத் தலைவர் சேகர், மத்திய சங்க செய லாளர் சுரேஷ், தக்காளி சங்க நிர்வாகி செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.