tamilnadu

img

தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

திருச்சிராப்பள்ளி, செப்.27- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சி ரோட்டரி கிளப் பட்டர்பிளை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி மாநகரக் காவல் நிலையம் மற்றும் அபிராமி ஓட்டுனர் பயிற்சி பள்ளியும் இணைந்து நடத்திய இருசக்கரத் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை ரோட்டரி 3000 ஆளுநர் ஜமீர் பாஷா துவக்கி வைத்தார். போக்குவரத்து உதவி ஆணையர் அருணாச்சலம், ஜோசப் கண் மருத்துவமனை இணை இயக்குனர் பிரதீபா, நிர்வாக அதிகாரி சுபாபிரபு, ரோட்டரி கிளப் பட்டர் பிளை தலைவர் சுசீலா, செயலாளர் சுபத்ரா, அபிராமி ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஆசிரியர் பூங்கொடி உட்படப் பலர் உள்ளனர்.