வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

img

இலவச பயிற்சி வகுப்புகள்

புதுக்கோட்டை, ஜூன் 2-புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி ‘சி’தேர்வுக்கான இலவச வகுப்புகள் மன்னர் கல்லூரியில் தொடங்கியது. பயிற்சி வகுப்பினை வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பேரா.எஸ்.கணேசன் தொடங்கி வைத்து உரையாற்றினார். ஓய்வு பெற்ற வரலாற்றுத் துறைத் தலைவர் சா.விஸ்வநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொ) வேல்முருகன் ஆகியோர் உரையாற்றினர். வருமான வரித்துறையில் பணியாற்றும் அருண்குமார் பிரபாகரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிகழ்வை தன்னார்வ பயிலும் வட்ட மூத்த உறுப்பினர்கள் பா.சீனிவாசன், சுரேஷ்குமார் புவனேஸ்வரன் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

;