tamilnadu

img

பயிர், நகைக்கடன் வட்டி மானியம் ரத்து செய்ததற்கு கண்டனம்

மீண்டும் வழங்க விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூர், ஜன.24- பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று ஆட்சி யரக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆட்சி யர் வே.சாந்தா தலைமை வகித்தார். கூட்டத்தில் என்.செல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்கம், விதொச பி.ரமேஷ், ஆர்.இராஜாசிதம்பரம், தமிழக விவசாயி கள் சங்கம், கு.ராமராஜன், தமிழக விவசாயி சங்க பிரதிநிதி, இராஜேந்திரன், விவசாய அணி, எஸ்.முருகேசன், தமிழ்நாடு எண் எணய் பனை சாகுபடியாளர் சங்கம், பூ. விஸ்வநாதன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம், பொ. மாணிக் கம், தமிழக விவசாயிகள் சங்கம், வி.ஜெய ராமன், மாவட்டச் செயலாளர், ஏ.கே.இராஜேந் திரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், டி.எஸ். சக்திவேல் உள்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோரிக்கை வைத்த தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.செல்லதுரை, வடகிழக்கு பருவ மழை பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சராசரியை விட 28 சதவீதம் குறை வாக பெய்துள்ளது. இதற்கு பிரதான கார ணம் கல்குவாரிகளில் இருந்து வரும் புகை மண்டலம் என கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.  மக்காச்சோளம் நடப்பு ஆண்டில் 56 ஆயி ரத்து 727 ஹெக்டேரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரத்து 760 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. வெளி மார்க்கெட்டில் ஆயிரத்து 800 ரூபாய் முதல் 2 ஆயிரம் வரை விலை கிடைக்கி றது. வெளி மார்க்கெட்டை விட குறை வாக மத்திய அரசு விலை நிர்ணயம் செய் துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். உற்பத்தி செலவின் அடிப்படையில் குவிண் டாலுக்கு 3 ஆயிரம் ருபாய் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். பருத்தி விளைச்சல் இந்த ஆண்டு மிகக் குறைவாக உள்ளதால் மத்திய அரசு சாதா ரக பருத்திக்கு 5 ஆயிரத்து 255 ரூபாயும், சுவின்ரக பருத்திக்கு 5 ஆயிரத்து 550 ரூபாய் விலை தீர்மானித்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு மத்திய அரசு தீர்மா னித்த விலையை விட குறைந்த அளவே கிடைக்கிறது. இது வரை ஒழுங்குமுறை விற்பணைக் கூடம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இத னால் தனியார் வியாபாரிகள் எடை மோசடி செய்து விவசாயிகளை ஏமாற்றி வரு கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் பால் உற்பத்தியில் முதலிடம் வகித்து வரு கிறது. எனவே குஜராத் மாநிலத்தைப் போல பால் உற்பத்தியை அதிகப்படுத்த ஊக்கத் தொகை அரசு லிட்டருக்கு 4 ரூபாய் வழங்க வேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள புதிய கால்நடை காப்பீட்டு திட்டத்தின் படி பிரிமீயம் செலுத்தும் விவசாயிகளுக்கு மாடு இறந்தால் இழப்பீடு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.  சோளார் சிஸ்டம் அடிப்படையில் விவ சாயிகள் 5 ஹெச்பி மின்மோட்டார் அமைக்க 2 லட்சத்து 22 ஆயிரம் ருபாயும், ஏழரை ஹெச்பி மோட்டார் அமைக்க 2 லட்சத்தி 90 ஆயிரத்தில் 30 சதவீதம் தொகை விவ சாயிகள் செலுத்த வேண்டும் என்பதை ரத்து செய்து முழு தொகையும் அரசே ஏற்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி நிலுவைத் தொகை ரூ. 32 கோடியை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் வழங்கா மல் இருப்பதை உடனடியாக வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கி வந்த பயிர்க்கடன் மற்றும் நகைக்கடனுக் கான வட்டி மானியத்தை ரத்து செய்ததை கண்டிப்பதோடு மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உள் ளடக்கிய மனு விவசாயிகள் சார்பில் ஆட்சி யரிடம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்சியர் பேசு கையில், விவசாயிகள் கோரிக்கை வைத்த மின்சார வாரியம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள் குறித்த கோரிக்கைகள் மீது விரை ந்து நடவடிககை எடுக்கப்படும் என்றார்.  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் செ.ராஜேந்திரன், பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி என்.எஸ்.முஹம்மதுஅஸ்லம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ப. செல்வக்குமரன், க.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;