திருச்சிராப்பள்ளி, ஜூலை 26- 100 நாள் வேலை கேட்டு மனு கொடுத்த அனைவருக்கும் புதிய அட்டை வழங்க வேண்டும். 100 நாள் வேலையை நிறுத்தாமல் அனைத்து நாட்களிலும் வேலை வழங்கி சட்டக் கூலியை வழங்க வேண்டும். 60 வயதடைந்தவர்களுக்கும், கண வனை இழந்தவர்களுக்கும், கண வனால் கைவிடப்பட்டவர்களுக்கும் காலம் கடத்தாமல் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று கிழக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலா ளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ், திரு வெறும்பூர் ஒன்றிய செயலாளர் நட ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பழ னிச்சாமி ஆகியோர் பேசினர். ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் முருகேசன், சங்கிலிமுத்து, குருநாதன், ராதா கிருஷ்ணன், ரவிக்குமார், சுதாகர், கிளை செயலாளர்கள் தனலெட்சுமி, ஆதிலெட்சுமி, அனிதா உள்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.