tamilnadu

img

தோழர் சின்னதம்பி காலமானார்

தரங்கம்பாடி, ஜூன் 20- நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஆக்கூர் தென்பாதியில் வசித்து வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் நீண்டகால உறுப்பினரும், கிளை செயலாளரு மான முதுபெரும் தோழர் எம்.சின்னதம்பி வியாழனன்று காலமானார். அவருக்கு வயது 104. கட்சியின் வட்டக்குழு சார்பில் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் செங்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.  மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், இராசையன், ரவிச்சந்தி ரன், வட்டக்குழு உறுப்பினர்கள் டி.கோவிந்தசாமி, காபிரியேல், கண்ணகி மற்றும் கிளை செயலாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் கிளை உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மறைந்த தோழர் சின்னதம்பி, கட்சியின் பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றவர். இறுதி வரை கட்சி உறுப்பினராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.