திருச்சிராப்பள்ளி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தீரமிக்க போராட்ட வீரர் தோழர் சிங்காரவேலு. கடந்த 20.3.1946-ல் நடந்த போராட்டத்தில் தோழர் சிங்காரவேலு செங்கொடி ஏந்தி போராடினார். இதனால் ஆத்திரமடைந்த சிலர், அவரை வெட்டி படுகொலை செய்தனர். அவர் இறக்கும் போதும் கூட கையில் பிடித்திருந்த செங்கொடியை கீழே விடாமல் செங்கொடியை உயர்த்தி பிடித்தவாறே தனது உயிரை விட்டார்.
இவரது மனைவி அமிர்தம்மாள்(96) அய ராத உழைப்பாளியான இவர் திருச்சி வயலூர் ரோடு வாசன் சிட்டி 7-வது கிராசில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் ஞாயிறு அன்று காலமானார். இவருக்கு சுப்ரமணியன் என்ற மகன் உள்ளார்.
தோழர் அமிர்தம்மாள் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், உறையூர் பகுதி செயலாளர் ஆகியோர் மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினர்.