அறந்தாங்கி, ஆக.23- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக ரத்ததான விழிப்புணர்வு பேரணி மற்றம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ரத்தம் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி தலைவர் டாக்டர் விஜய் தலைமை வகித்தார் ரோட்டரி ஆறுமுகம், டாக்டர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர் செயலாளர் அப்துல்பாரி வரவேற்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் ரவீந்திரன் பேரணியை துவக்கி வைத்தார் தி போர்ட் சிட்டி கான் அப்துல் கபார்கான், கவி கார்த்திக், செல்ல செந்தமிழ்செல்வன் ஆகியோர் உரையாற்றினர். பேரணியில் கேம்ப்ரிஜ் கேட்டரிங், எம்எஸ் பாலிடெக்னிக், வளர்மதி தொழிற்கல்வி மையம் போன்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு 50 யூனிட் இரத்தம் தானம் செய்தனர். சங்க திட்ட தலைவர் பழனிவேல் மற்றும் தி போர்ட் சிட்டி ரோட்டரியினர் கலந்து கொன்டனர். நிறைவாக பொருளாளர் கருப்பையா நன்றி கூறினார்.