திருவாரூர், ஏப்.3-ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்என மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச்சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக புதனன்று தமிழ்நாடு மாநிலஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் குடவாசல் வட்டாரத்தில் பிரதாமராமபுரம் ஊராட்சியில் விவசாய வேலை நடைபெறும் வயல் பகுதிகளுக்கு சென்று வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களிடையே 100 சதவீதம் வாக்களித்திட தேர்தல் விழிப்புணர்வும், திருவாருர் வட்டாரத்தில் தப்பளாம்புலியூர் ஊராட்சியில் வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக உபயோகப்படுத்தக் கூடிய ஆவணங்கள் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.