tamilnadu

கல்விப் பணியில் ஏ.வி.சி கல்லூரி

1955 ஆம் ஆண்டு மயிலாடுதுறை நகராட்சி பூங்காவில் 120 மாணவர்களைக் கொண்டு துவங் கப்பட்ட இக்கல்லூரி  2018-19 ஆம் கல்வியாண்டில்  5,307 மாணவர்களைக்கொண்ட மிகப்பெரிய கல்வி நிறுவனமாக வளர்ந்துள்ளது. பெண்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிடும் வகையில் 1984 ல் மாலைநேரப் பிரிவு தொடங்கப்பட்டு இன்று 3067 மாணவியர் இக்கல்வி நிறுவனத்தில் பயில்கி ன்றனர்.  நகர்புற சூழலில் அமையாது கிராமப்புறச் சூழலில் அமைந்து கல்வி சேவை ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு இக்கல்வி நிறுவனம் செயல்பட்டுவருகின்றது. ஏ.விசி. கல்வி நிறுவனங்களின் தலைவராக (பொ) மருத்துவர் என்.விஜயரங்கன் மற்றும் செயலர் மற்றும் பொருளாளராக (பொ) கார்த்திகேயன் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் திறம்பட கல்லூரியை நடத்தி வருகின்றனர்.  தற்சமயம் முதல்வராக முனைவர் ஆர்.நாகராஜன் தலைமையில் 268 பேராசிரியர்களும், 101 ஆசிரியரல்லா பணியாளர்களும் சீரிய பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். இவர்களில் காலைநேரப்பிரிவில் 89 ஆசிரியர்கள், 28 ஆசிரியரல்லாப் பணியாளர்களும் , மாலை நேரப்பிரிவில் 179 ஆசிரியர்கள், 73 ஆசிரியரல்லாப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். எமது கல்லூரியில் 17 இளங்கலை மற்றும் 18 முதுநிலை மற்றும் ஆய்வு வகுப்புகள் நடைபெறுகின்றன.


ஏறத்தாள எல்லாத்துறைகளிலும் முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) வரை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சேவை மனப்பான்மை வளர வேண்டும் என்ற நோக்கத்தோடு “PEKAKகல்வி விரிவாக்கப் பணி” இக்கல்லூரியில் செயல்படுத்தப்பட்டு, கல்லூரியை சுற்றியுள்ள 21 கிராமங்களை தத்தெடுத்து அக்கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, சமூக விழிப்புணர்வுகளும் மாணவர்களைக்கொண்டு ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. மயிலாடுதுறையில் சமூக விழாக்கள் நடைபெறுகின்ற போதும், விழாக்காலங்களிலம் இக்கல்லூரி NSS மற்றும் NCCமாணவர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி மக்களுக்கு உதவிபுரிந்து வருகின்றனர். இக்கல்லூரி சூளுளு மாணவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவினை ஏற்படுத்தி இரத்தம் தேவைப்படுவோர்களுக்கு இரத்தம் வழங்கி சமூக சேவையாற்றிவருகின்றனர்.


இது போன்று மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் சேவை செய்யும் நோக்கில் NCC, NSS, ROTARACT, LEOCLUB, JUNIOR JAYCEES Club, Students Exnora, RRC, YRC, PEKAK Extension Placement Cell, Target CE, Ilanthoothu, Quiz Club, R&D Cell, EDC, IQAC, Fine Arts Cell for Prevention of Sexual Harassment, Psychology Counseling Centre, Equal Opportunity Centre, Student’s Grievance Cell and Internet Club ஊடரb  ஆகிய 22 அமைப்புகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.கல்லூரியின் விளையாட்டுத் துறையில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பல்வேறு விளையாட்டு களில் கலந்து கொண்டு  உலக அளவிலும், தேசிய அளவிலும் மற்றும் பல்கலைக்கழக அளவிலும் பல்வேறு சாதனைகள் புரிந்து, கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் நுண்கலைத்துறை மாணவ மாணவிகளும் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்று, இக்கல்லூரியின் புகழை பலரும் அறியும் வண்ணம் தழைத்தோங்க செய்து வருகின்றனர். கல்லூரி நூலகத்தின் செயல்பாடு பேராசிரியர்க ளுக்கும், ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் 90,329 நூல்களும், 160 இதழ்களையும் கொண்டு மிகப்பெரிய நூலகமாகத் திகழ்கிறது. புதிதாக       ரூ. 6,44,000 /- செலவில் மின் நூலகம் (Digital Library அமைக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் குறைந்த கட்டணத்தில் மாணவ, மாணவிகளுக்கு நகலெடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.


பார்வை குறைப்பாடுள்ள மாணவர்களுக்கு சிறப்பு கணிப்பொறி மற்றும் மென்பொருள் வசதி (HEPSN) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அதிவேக இண்டர்நெட் வசதி செய்யப்பட்டுள்ளது. கல்லூரியின் Placement Cell  மூலமாக பலவகையான பயிற்சி வகுப்புகள் மற்றும் பணிப்பட்டறைகள் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து, பல்வேறு நிறுவனங்களை “Placement Cell” விற்கு அழைத்து மாணவர்களுக்கு படிக்கும்போதே வேலை பெறுவதற்கு ஆவண செய்யப்பட்டுகின்றனர்.


 மாணவர்கள் பயிலும் காலத்திலேயே பொருள் ஈட்டுவதற்கு வழிவகை செய்யும் ““Earn While Learn” ” எனும் திட்டம் இக்கல்லூரியில் செயல்படுத்தப்பட்டு இதன்மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். 28 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களால் இளந்தூது என்ற பருவ இதழும், கணிப்பொறி மாணவர்களால் நடத்தப்படும் SWIFTஎன்ற அமைப்பின் சார்பில்  GLOBUSஎன்ற இதழும், ஆங்கில இலக்கியக் கழகத்தின் சார்பில் PEKAK PLUMES (பீக்காக் புளும்ஸ்)என்ற இதழும் காட்சித்தகவல் தொடர்பியல் மாணவர்கள் சார்பாக வெளிவரும்  “Viscom Times ” எனும் இதழும் மாணவர்களின் திறனை பறைசாற்றுவதாக உள்ளது.


மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் படைப்புகளை PEKAKஎனும் கல்லூரி ஆண்டு மலரும் மயூர் ஆய்வு இதழும் வெளியிட்டுவருகின்றனர். தமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில இலக்கிய மன்றம், வரலாற்று மன்றம், பொருளியில் மன்றம், வணிகவியல் மன்றம் , அறிவியல் மன்றம் , நுண்கலை மன்றம் போன்றவற்றின் சார்பாக தகுதி சார்ந்தவர்களை அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு மாணவர்களின் அறிவுத்திறன் பெருக இக்கல்லூரி வழிவகை செய்துள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப்பல்கலை க்கழகம் , தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழகம் முதலியவற்றின் கல்வி மையமாகவும் இக்கல்லூரி செயல்பட்டு பலருடைய வாழ்க்கை முன்னேற் றத்துக்கு வழிவகை செய்துள்ளது.


சிறப்புகள் பல பெற்ற இக்கல்லூரி 1987 ல் தன்னாட்சி தகுதியினை  பெற்றது. தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரிடம் தற்சமயம் A கிரேடு எனும் உயரிய நிலையினைப்பெற்று அனைவரது பாராட்டினையும் பெற்று மக்கள் மனதில் சிறந்த கல்லூரியாகத்திகழ்கின்றது. இக்கல்லூரியின் பெருமைக்கு மணிமகுடம் சூட்டியதாக அமைந்தது ஆற்றல் சார் கல்லூரி என்ற தகுதியை பெற்றது. (College With Potential For Excellence) இத்தகுதியை பெற்றதால் பல்கலைக்கழக மானியக்குழு இக்கல்லூரிக்கு ரூபாய் 1.29 கோடி நிதியுதவி அளித்துள்ளது.60 சதவீதத்திற்கும் மேலான பெண்கள், 70 சதவீதத்திற்கும் மேலான முதல் தலைமுறை பட்டதாரிகள், 75 சதவீதத்திற்கும் மேலான பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் இக்கல்லூரியின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பட்டங்கள் பெற்று சாதனைகள் படைத்து உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை பெறுகின்றார்கள். கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பலர் இன்று உலகின் பல இடங்களில் தடம் பதிக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லாத்துறைகளிலும் பரவியுள்ளனர். அவர்களிடையே ஏ.வி.சி என்னும் மூன்றெழுத்து உயிர் மூச்சாகத் திகழ்கின்றது. ஏ.வி.சி பொறியியல் கல்லூரி 1996 ஆம் ஆண்டு துவங்கப்பட்டபொறியியல் கல்லூரியில் தற்போது 7 இளநிலைப்பிரிவுகளும், 5 முதுநிலைப்பிரிவுகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இக்கல்லூரிக்கு பெங்களூரில் உள்ள தேசியதரமதி ப்பீட்டுக்குழு NAAC தரச்சான்றிதழை வழங் கியுள்ளது..


மேலும் அண்ணா பல்கலைக்கழகம் இயந்திரவியல், கணிணி பயன்பாட்டுத்துறை மற்றும் வேதியியல் துறைகளின் ஆராய்ச்சி மையமாக இயங்கிட அனுமதியளித்துள்ளது. கடந்த 23 ஆண்டுகளில் 5000 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இங்கு பயின்று இந்திய அளவிலும், உலக அளவிலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.விவசாயத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள இம்மாவட்டத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் இப்பொறியியல் கல்லூரி இயங்கி வருகின்றது. நூலகம், கணிப்பொறி ஆய்வகம், ஆய்வுகூட வசதிகள், இணையதள நூலக வசதி உள்ளிட்டு பல்வேறு சிறப்பம்சங்களுடன் இயங்கி வரும் இப்பொறியியல் கல்லூரியை முதல்வர் முனைவர் எஸ்.விஜயராஜ், கல்லூரி இயக்குனர் முனைவர் எம்.செந்தில் முருகன் மற்றும் தணை முதல்வர் முனைவர் ச.செல்வமுத்துக்குமரன் ஆகியோர் சிறப்பான முறையில் வழிநடத்திவருகின்றனர். ஏ.வி.பாலிடெக்னிக் கல்லூரி 1983 ல் தொடங்கப்பட்ட தொழில்நுட்பக்கல்லூரி 6 பாடப்பிரிவுகளாக சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ஸ் & எல்க்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிக்கேசன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் இன்பர்ம்மேசன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் பயிற்சியளிக்கப்படுகிறது. இக்கல்லூரி சர்வதேச தரச்சான்றிதழ் IS0 9001-2008 கடந்த 2011-12 கல்வியாண்டு முதல் பெற்று இயக்குனர் எ.வளவன், முதல்வர் முனைவர்.எஸ்.கண்ணன் தலைமையில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்ட  Campus Interview மூலம் 2017-18 ம் கல்வியாண்டில் 207 மாணவர்கள் வேலைக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;